தலைப்பு செய்திகள்
கிருஷ்ணகிரியில் பதவியேற்றவுடன் களத்தில் குதித்த நகரமன்ற தலைவர்.

கிருஷ்ணகிரியில் பதவியேற்றவுடன் களத்தில் குதித்த நகரமன்ற தலைவர் – நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாயில் இறங்கி சுத்தம் செய்து பணிகளை துவங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி நகர மன்ற உறுப்பினர்கள் தேர்தல் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற தலைவர் துணைத்தலைவர் மறைமுக தேர்தலில் கிருஷ்ணகிரி நகர மன்ற தலைவராக திமுகவைச் சேர்ந்த பரிதா நவாப் மற்றும் துணைத் தலைவராக சாவித்திரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து நேற்றைய தினம் இருவரும் பதவியேற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து பதவி ஏற்றவுடன் முதல் பணியாக கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியில் நீண்ட நாட்களாக மழை நீர் வடிகால் கால்வாய்கள் தூர் எடுக்கப்படாமல் சாக்கடை நீர் தேங்கி இருந்தது .

அதனை சுத்தம் செய்யும் பணியில் நகர மன்ற தலைவர் பரிதா நவாப் மற்றும் துணைத் தலைவர் சாவித்திரி ஆகியோர் ஈடுபட்டனர். நகராட்சி தூய்மை பணியாளர்களுடன் ஆணையாளர் முருகேசன் முன்னிலையில் தூர் எடுக்கும் பணி நடைபெற்றது. நகர்மன்ற தலைவி மற்றும் துணை தலைவி ஆகியோர் சாக்கடையில் இறங்கி மண்வெட்டி மூலம் தூர் எடுத்தனர்.

இதையடுத்து சுமார் 30க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூர் எடுக்கும் பணியை மேற்கொண்டார்.
