தலைப்பு செய்திகள்
எல்ஐசி பங்குகளை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தஞ்சாவூரில் காப்பீட்டு கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

எல்ஐசி பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது எனவும் தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காப்பீட்டு கழக ஊழியர்கள் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காப்பீட்டுகழக ஊழியர்கள் சங்கம் சார்பில் துணை தலைவர் சுவாமிநாதன் தலைமையில் தர்ணா ஆர்பாட்டம் நடைபெற்றது இதில் எம்பி பழநிமாணிக்கம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் இந்த ஆர்பாட்டத்தில் காப்பீட்டு கழக ஊழியர்கள் எல்ஐசி முகவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர் பொதுத்துறை நிறுவனமாக லாபத்தில் இயங்க கூடிய எல்ஐசியின் பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளது.

இதனால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவி வரும் எல்ஐசியின் சேவை பாதிக்கப்படும், மக்கள் நல திட்டங்களுக்கு கோடி கணக்கில் அளித்து வரும் எல்ஐசி நிறுவனம் தனியார் மயமாக்கப்பட்டால் பிரிமியம் தொகை கடுமையாக உயரும் ஏழை எளிய மக்கள் பாலிசி எடுக்க முடியாத நிலை ஏற்படும் எனவே பொதுத்துறை நிறுவனமாக தொடர வேண்டும் மேலும் தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாக்க வேண்டும் .

பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும் அதனை தனியார் மயமாக்க கூடாது புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவும் குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயிக்க கோரியும் எல்.ஐசி நிறுவனம் தொடர்ந்து பொதுத் துறை நிறுவனமாக செயல்பட மத்திய அரசு எல்.ஐ.சியின் பங்குகளை தனியாருக்கு விற்கும் திட்டத்தை முழுமையாக கைவிட கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.
