BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் ஏழு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் மார்ச் 9ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்து. இருந்தது அதன்படி இன்று தமிழக கடலோரப் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்.

 

நாளை தமிழக கடலோரப் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் புதுச்சேரி காரைக்கால், ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் மேலும் சென்னையில் கடலோரப் பகுதிகளில் தரி காற்று வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )