தலைப்பு செய்திகள்
தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டாலின்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.

தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஸ்டாலின் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
அரசியலில் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.சம்பத் பிறந்தநாள் விழா சென்னை சத்தியமூர்த்திபவனில் நடைபெற்றது. அப்போது அவரின் மகனும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஈ.வி.கே.சம்பத் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதச்சார்பற்ற கூட்டணி தமிழ்நாடு மக்களை மட்டுமின்றி இந்திய மக்களையே காப்பாற்றும் கூட்டணி என பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசியலில் கூட்டணி தர்மத்தை காப்பாற்றுவதில் ஸ்டாலின் முன்னணியில் இருக்கிறார்.
தற்போது இந்த அரசியல் நடவடிக்கை மூலம் மு.க.ஸ்டாலின் இமாலய அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இந்த நடவடிக்கை தனது கட்சி கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்பதை இது தெளிவாக காட்டுகிறது.மேலும், தமிழ்நாட்டின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் எனவும் அவர் கூறினார்.
