தலைப்பு செய்திகள்
உயர்நீதி மன்றத்தில் கல்வித் துறையால் ஒப்படைக்கப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின் படி பதவி உயர்வு கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் – பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை.

உயர்நீதி மன்றத்தில் கல்வித் துறையால் ஒப்படைக்கப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின் படி பதவி உயர்வு கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் – பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை
அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சுப்பிரமணியம் படத்தில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. விழா நடந்த கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ராமநாதன், சந்திரன் மாநிலச் செயலாளர் ராஜாமுகமது, மாநில பொதுச்செயலாளர் சுந்தரபாண்டியன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன், உட்பட 50க்கும் மேற்பட்டோர்
கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்திகளுக்கு பேட்டியளித்த மாநில பொதுச்செயலாளர் சுந்தரபாண்டியன்
2003-2004 ஆம் ஆண்டு முதல் தொடக்கக் கல்வித் துறையில் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் பொருட்டு 6 முதல்
8ஆம் வகுப்பு வரை உள்ள பாடங்களைக் கற்பிக்க பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கிராம மக்கள் பயன் பெரும் பொருட்டு நடுநிலைப் பள்ளிகள் ஆண்டு தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர் நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பள்ளிகளில் பணி புரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித் துறையில் இருந்து பள்ளிக்கல்வித் துறைக்கு தங்களது பதவி உயர்வுக்கான முன்னுரிமையை இழந்து மாற்றப்படுகின்றனர்.

மேலும், அலகு விட்டு அலகு மாறுதல் முறையிலும் பட்டதாரி ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித் துறையில் இருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் பெற்றுள்ளனர்.
இவ்வாறு தொடக்கக் கல்வித் துறையில் இருந்து பள்ளிக் கல்வி துறைக்கு சுமார் 15000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுதல்
பெற்றுள்ளனர். ஒரே தேர்வின் மூலம், ஒரே பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும் கூட கல்வித் துறையால் தொடக்க கல்விதுறைக்கு அனுப்பபட்ட ஒரே காரணத்திற்காக பள்ளிக் கல்வித் துறையில் பதவி உயர்வு கடந்த
18ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கடந்த காலங்களில் பல்வேறு ஆசிரியர்களாலும், அனைத்து பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தாலும் கல்வித் துறையின் உயர் அதிகாரிகளுக்கும், கல்வித் துறை முதல்வர் மற்றம் அமைச்சர்களுக்கு கோரிக்கைகள் தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வந்தாலும் எந்த முடிவினையும் எடுக்காமலும் கோரிக்கைகளுக்கு உரிய பதிலும் இல்லை. 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதி மன்றத்தின உத்தரவினால் பதவி உயர்வுக்கான முன்னுரிமைப் பட்டியல் கல்வித் துறையினால் வெளியிடப்பட்டு இருந்தும், கல்வித் துறை அந்த பட்டியலின்படி பதவி உயர்வு கவுன்சிலிங்கை நடத்துவது இல்லை.
உயர்நீதி மன்றத்தில் கல்வித் துறையால் ஒப்படைக்கப்பட்ட முன்னுரிமைப் பட்டியலின் படிபதவி உயர்வு கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
