தலைப்பு செய்திகள்
உடுமலை மானுபட்டி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்க தலழக மாணவிகள் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நடத்தி தென்னை டானிக் செயல்விளக்கம் அளித்தனர்.

உடுமலை மானுபட்டி கிராமத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்க தலழக மாணவிகள் கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு நடத்தி தென்னை டானிக் செயல்விளக்கம் அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவிகள் 10 பேர் – அஜிதா, சாரு ஸ்ம்ரித்தீ, தக்க்ஷண்யா, ஹரி பிரியா, பீயுசா, ஷோபிகா, சுப்பிரியா, சுவேத பிரியா, விசாலி கவி பிரியா, மிருது பாஷினி ஆகியோர்கள் ” கிராம தங்கல்” திட்டத்தின் கீழ் தங்கி குறிப்பிட்ட கிராமங்களில் விவசாயிகளிடம் கள பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்கழ் மானுபட்டி கிராமத்தில் குறுக்கு நடை ஆய்வு செய்தும் ஊர்மக்கள் மற்றும் விவசாயிகளின் உதவியோடும் “கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு” நடத்தினர். மானுபட்டி கிராமத்தின் சமூக வரைபடம், கிராம வள வரைபடம், பருவங்களையும் அப்பருவங்களில் பயிரிடப்படும் பயிர்களையும் விளக்கும் வரைபடம், கிராம மக்களின் தினசரி வேலை கடிகாரம், கிராம வசதிகளை விளக்கும் வெண்படம், வேளாண்மை செய்வதில் உள்ள பிரச்சினைகளை விளக்கும் பிரச்சினை வேர் ஆகியவற்றை வரைந்தனர். அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ‘தென்னை டானிக்கை’ வேர் மூலமாக பயன்படுத்தும் முறை குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர். விவசாயிகளும் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
