தலைப்பு செய்திகள்
தஞ்சையில் பஸ்சை தாமதமாக இயக்கியதை கேட்டதற்காக முதியவரை தாக்கிய தனியார் மினிபஸ் டிரைவர்.
தஞ்சையில் பஸ்சை தாமதமாக இயக்கியதை கேட்டதற்காக முதியவரை தாக்கிய தனியார் மினிபஸ் டிரைவர் மற்றம் கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை அருகே வல்லம் ஏகேஆர் நகரை சேர்ந்த அய்யாவு மகன் கருப்பசாமி (50). இவர் சம்பவத்தன்று ஊருக்கு தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டில் ஊருக்கு செல்ல பஸ்சிற்காக காத்திருந்தார். அப்போது வழக்கத்தை விட தாமதமாக தனியார் மினிபஸ் வந்துள்ளது.
இதையடுத்து மினிபஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் ஏன் இப்படி தாமதமாக பஸ்சை இயக்குகிறீர்கள் என்று கருப்பசாமி கேட்டுள்ளார். இதில் இருதரப்புக்கும் மத்தயில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து தனியார் மினிபஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் சேர்ந்து கருப்பசாமியை தாக்கி மிரட்டி உள்ளனர். இது குறித்து தஞ்சை மேற்கு போலீசில் கருப்பசாமி புகார் செய்தார். இதன்பேரில் மேற்கு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து தஞ்சை இந்திரா நகரை சேர்ந்த சுகுமார் மகன் வசீகரன் (29), கண்டிதம்பட்டு மகாலிங்கம் மகன் பிரவீன்குமார் (22) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.