தலைப்பு செய்திகள்
தஞ்சையில் மனநிலை பாதித்த தனது தாயை காணவில்லை என்று மகன் போலீசில் புகார்.
தஞ்சையில் மனநிலை பாதித்த தனது தாயை காணவில்லை என்று மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.
தஞ்சை புதுக்கோட்டை சாலை சித்ரா நகரை சேர்ந்த மாரியப்பன் மகன் , சூரியகாந்தன் (48). இவரது தாயார் இந்திராணி (67). மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. கடந்த 3ம் தேதி வீட்டை விட்டு சென்ற இந்திராணி மீண்டும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.
இதையடுத்து சூரியகாந்தன் பல்வேறு இடங்களிலும் தனது தாய் இந்திராணியை தேடியுள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து சூரியகாந்தன் தமிழ் யுனிவர்சிட்டி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் பொறுப்பு கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.
CATEGORIES தஞ்சாவூர்