தலைப்பு செய்திகள்
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடடுக்கப்பட்டிருக்கும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பல்லாயிரக்கணக்கில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சம்பா தாளடி என முப்போக சாகுபடி செய்யப்பட்டுள்ளது குறுவை அறுவடை முடிந்துள்ள நிலையில் தற்போது விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனை செய்த நெல் மூட்டைகள் பல்லாயிரக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளது ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் மூட்டைகள் வரை தேக்கம் அடைந்துள்ளது இதனால் அறுவடை செய்த நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் 20 நாட்களுக்கு மேலாக காத்து கிடக்கின்றனர் மேலும் வயல்களில் அறுவடை செய்யாமல் விளைந்த நெற்கதிர்கள் சாய்ந்து வருகிறது தஞ்சை மாவட்டம் சக்கரபந்தம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது இந்நிலையில் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் இந்த நெல் மூட்டைகள் நனைந்து வீணாகி விடும் என விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர் எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகளை அனுப்பி எடுத்துச் செல்லவேண்டும் தேக்கம் அடைந்திருக்கும் நெல்மணிகளையும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளின் அவசர கோரிக்கையாக உள்ளது.