தலைப்பு செய்திகள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோடைகால விழிப்புணர்வு முகாம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோடைகால விழிப்புணர்வு முகாம் நலம் மருந்தகம் மற்றும் சரித்திரம் அறக்கட்டளை இணைந்து நடத்தினர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் கோடைகால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இளநீர், தர்பூஸ்,கரும்புச் சாறு மற்றும் முக கவசம் வழங்கினர். இதில் நலம் மருந்தகம் உரிமையாளர் விக்னேஷ், சரித்திரம் அறக்கட்டளை கவின்குமார், ஏழுமலை, தமிழ்ச்செல்வன், விக்ரம் மற்றும் ஆட்டோ ஓட்டுனர் சங்க தலைவர் விஜி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பத்தூர்