தலைப்பு செய்திகள்
17 வயது சிறுமி உயிரிழப்பு பாலியல் தொல்லை!
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் வசித்து வரும் நாகூர் ஹனிபா இவருக்கு வயது 26 கடந்த மாதம் இவர் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி கடத்தி சென்றுள்ளார்.
இவர் கடத்தி சென்று பாலியல் வன் கொடுமை செய்ததாக சிறுமியின் தந்தை மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் சிறுமியை தேடி வந்தனர்.
மேலும் அந்த சிறுமி பத்து நாட்கள் கழித்து நாகூர் ஹனிபாவின் தாய் சிறுமியை அவரது வீட்டில் ஒப்படைத்ததாகவும் ஒப்படைக்கும் போது அந்த சிறுமி உடல் நலம் சரியில்லாமல் போனதாகவும் எலி மருந்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக சிறுமியின் பெற்றோர்கள் ராஜாஜி மருத்துவமனையில் சிறுமியை சிகிச்சைக்காக அனுமதித்தனர் சிறுமியை பரிசோதனை செய்ததில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என தெரியவந்தது இன்று சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் நாகூர் ஹனிபா மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.