தலைப்பு செய்திகள்
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சாலை மறியல்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ராமநாதபுரம் மாவட்டத்தில் வருடந்தோறும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் பேரணி நடத்தப்பட்டு வந்த நிலையில் இந்த வருட அணிவகுப்பு நடத்துவதற்காக அனுமதி கேட்டு அதற்க்கு காவல்துறையினர் அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் செல்லும் வழியில் தேனி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு காவல் துறையினரை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
CATEGORIES தேனி