தலைப்பு செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து வருகிறது.

தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் நனைந்து வருகிறது
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு குறுவை சம்பா தாளடி என முப்போக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

குறுவை சாகுபடி அறுவடை முடிந்து சம்பா மற்றும் தாளடி அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் தஞ்சாவூர் உள்ளிட்ட இதையடுத்து தற்போது தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் பேராவூரணி திருவையாறு கல்லணை உள்ளிட்ட தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது .

இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் லாரிகளில் ஏற்றி செல்லபடாததால் தேக்கமடைந்து இருக்கிறது இதனால் விவசாயிகள் கொண்டு வரக்கூடிய நெல்லையும் கொள்முதல் செய்ய முடியவில்லை இதையடுத்து வயல்களில் அறுவடை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் மழை பெய்து வருவதால் சக்கரசாமந்தம் உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகள் விவசாயிகள் கொட்டி வைத்துள்ள நெல்மணிகள் நனைந்து வருகிறது விவசாயிகள் தார்ப்பாய்கள் கொண்டு நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
