BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கிருஷ்ணகிரி நகரமன்றதலைவராக பதவி ஏற்ற பரிதா நவாப் புகழ்பெற்ற சங்கர் தோப்பு தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தி ஏழைகளுக்கு பிரியாணி விருந்து வழங்கினார்.

கிருஷ்ணகிரி நகரமன்றதலைவராக பதவி ஏற்ற பரிதா நவாப் புகழ்பெற்ற சங்கர் தோப்பு தர்காவில் சிறப்பு தொழுகை நடத்தி ஏழைகளுக்கு பிரியாணி விருந்து வழங்கினார்.

நடந்து முடிந்த கிருஷ்ணகிரி நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் அதிக இடங்களில் திமுக கைப்பற்றியது. நகரமன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த பரிதா நவாப் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக பதவி ஏற்றுக் கொண்ட பரிதா நவாப் நகரில் உள்ள மழைநீர் வடிகால் தூய்மை பணிகள், மற்றும் குப்பைகள் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

இது இடையே கிருஷ்ணகிரி அருகே உள்ள புகழ்பெற்ற சங்கர் தோப்பு தர்காவிற்க்கு சென்று நகர மன்ற தலைவராக பதவி ஏற்றதை அடுத்து பாத்தியா எனப்படும் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் தர்காவிற்கு வந்திருந்த 100க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமாக இனிப்புகளுடன் பிரியாணி விருந்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் நவாப் விவசாய அணி துணை செயலாளர் வெங்கடேசன் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் டி.சி.ஆர்.திணேஷ் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )