தலைப்பு செய்திகள்
மடத்துக்குளம் பகுதியில் உள்ள பழனி பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களில் இன்று மின்மயமாக்கல் ஆய்வு பணி.

மடத்துக்குளம் பகுதியில் உள்ள பழனி பொள்ளாச்சி ரயில் வழித்தடங்களில் இன்று மின்மயமாக்கல் ஆய்வு பணி நடைபெற உள்ளது.
இதன் காரணமாக இன்று பழனி- பொள்ளாச்சி புதிய மின்சார ரயில் பாதையை, பெங்களூர் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்ய உள்ளார்.
இதனையடுத்து இன்று 3 மணி முதல் 6 மணி வரை அதிவேக ரயில் சோதனை வேக ஓட்டம் நடத்த இருக்கிறார்.
எனவே மாலை 3 மணி முதல் 6 மணி வரை, ரயில் நிலையம் அருகே உள்ள பொதுமக்களும் மற்றும் குடியிருப்புவாசிகள், கால்நடை மேய்ப்போர், என அனைத்து தரப்பினரும் மடத்துக்குளம் பகுதியில் உள்ள ரயில் பாதையை கடக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் இதன் மூலம் அறிவிப்பு செய்கிறது.
CATEGORIES திருப்பூர்
