BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி அமைதி புறவாக மாறிய திருச்சி பள்ளி மாணவிகள்.

உக்ரைன் போரை நிறுத்த வலியுறுத்தி அமைதி புறவாக மாறிய திருச்சி பள்ளி மாணவிகள்.

உலக பெண்கள் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்தப் பெண்கள் தினத்தை முன்னிட்டும் உலக நாடுகளுக்குள் நடைபெறும் போரை நிறுத்த வலியுறுத்தியும் திருச்சி யுகா பெண்கள் அமைப்பு மற்றும் திருச்சி மெத்தடிஸ்ட் பள்ளி சார்பில் பள்ளி மாணவிகள் “அமைதி புறா” வடிவில் அமர்ந்திருந்தனர்.

இந்த புறாவிற்கு நடுவில் இந்திய தேசிய கொடியை மாணவிகள் கையில் பிடித்துக்கொண்டு பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன் கொடுமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உலக நாடுகளுக்கிடையில் நடைபெறும் போரை நிறுத்த வலியுறுத்தியும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்
பின்னர் சமாதான சின்னமாக திகழும் அமைதி புறாக்களை வானில் பறக்க விட்டனர். இந்த நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )