BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உக்ரைனில் பள்ளிகள் மருத்துவனைகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை 15 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

உக்ரைனில் இருந்து இதுவரை 16,000 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆபரேஷன் கங்கா என பெயரிடப்பட்டு மீட்புப் பணிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

இதுவரை 16,000 இந்தியர்களை 76 விமானங்களில் அழைந்து வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

12-ஆவது நாளாக நீடிக்கும் போர்

உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ஆம் தேதி ரஷ்யா போரை தொடங்கியது. 12-ஆவது நாளாக போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஏற்கனவே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

விமான நிலையில் தகர்ப்பு

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரைனின் மேற்கு மத்திய பகுதியில் அமைந்துள்ள வின்னிட்சியா நகரில் ரஷ்ய படைகள் 8 முறை ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நகரில் இருந்த விமான நிலையம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதனை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

9 லட்சம் அகதிகள்: போலந்து

உக்ரைனில் இருந்து இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமான அகதிகள் தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.

ரஷ்யாவில் போராட்டம்

உக்ரைனில் போர் நடத்த உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிரான அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட 1,700 க்கும் அதிகமானோரை ரஷ்ய போலீஸார் கைது செய்துள்ளனர்.

மீட்புப் பணியில் இந்தியக் குழு

உக்ரைனின் சுமியில் இருந்து மேற்கு எல்லைகளுக்கு இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதை ஒருங்கிணைக்க இந்திய தூதரகக் குழு பொல்டாவா சென்றது. சுமியில் உள்ள மாணவர்கள் விரைவில் வெளியேற தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுரை

உக்ரைனின் தலைநகர் கீவில் உள்ள இந்தியத் தூதரகம் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு திடீர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், தங்கள் பெயர்கள் மற்றும் விவரங்களை கூகுள் படிவத்தில் உடனடியாக உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )