BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கடத்தூர் அரசுப் பள்ளியில் புத்தகத் திருவிழா.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் கிளை நூலகம், திருவள்ளுவர் பொத்தக இல்லம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா, கடத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இன்று தொடங்கி புதன்கிழமை வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியை.ரமாதேவி தலைமை வகித்தார். ஐயப்பா கல்லூரி தாளாளர் சதாசிவம் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

நூலகர்சரவணன் புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தார். விழாவில் நெடுமிடல், சாமிக்கண்ணு, மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் சரவணன் வரவேற்புரை வழங்கினார். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இந்தப் புத்தகக் கண்காட்சியில் மாணவர்களுக்கான நூல்கள் மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த அரிய வாய்ப்பை மாணவர்களும் பெற்றோர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தலைமை ஆசிரியரும் நூலகரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )