தலைப்பு செய்திகள்
உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, நான்கு வழிச் சாலையில் வாகனங்கள் சிறைபிடிப்பு.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பெரிய கோட்டை ஊராட்சிக்கு சொந்தமான ஒரு தரை மட்ட பாலத்தை விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தி வந்த நிலையில் அந்த தரைமட்ட பாலத்தை நான்கு வழிச்சாலை ஒப்பந்ததாரர்கள் மூடி விட்டனர். இதை அறிந்த அப்பகுதி விவசாயிகள் 50 க்கும் மேற்பட்டோர் நான்கு வழிச்சாலை பணிகளை மேற்கொள்ளும் வாகனங்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்
