BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

வெற்றிக்கு காரணம் இதுதான். உதயநிதி ஸ்டாலின் விளக்கம்.

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் உள்ள ஜி.கே.உலகப் பள்ளி வளாகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது

இந்த முகாமில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன. ஒரே நேரத்தில் 12,500 பட்டதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு வந்த நிலையில், 2000-த்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

அப்போது பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், “தமிழகத்தில் தொழில் துறையை மேம்படுத்த 2500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு ஆண்டுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது பிரச்சாரத்திற்கு சென்றபோது மிகுந்த எழுச்சி காணப்பட்டது.

அதன் காரணமாகவே உள்ளாட்சித் தேர்தலில் திமுக 99 சதவீதம் வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணம் தமிழக முதல்வர் ஸ்டாலின்” எனக் கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )