தலைப்பு செய்திகள்
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான மகேந்திரன் எம்.எல்.ஏ விடம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிளைக்கழக செயலாளர்கள் வாழ்த்து பெற்றனர்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான மகேந்திரன் உடுமலை கிழக்கு ஒன்றியம் கணக்கம்பாளையம் உடுமலை மேற்கு ஒன்றியம், தேவனூர் புதூர் இராவணாபுரம் உடுக்கம்பாளையம் பெரிய பாப்பனூத்து கே.ரெட்டிபாளையம் ஆகிய 6 ஊராட்சிகளில் புதியதாக நியமனம் செய்யப்பட்டுள்ள கிளைக்கழக செயலாளர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.ஜி.ஜெகநாதன், உடுமலை மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கரிச்சிகுமார், மாவட்ட பாசறை செயலாளர் காமாட்சி சுந்தரம், ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன் ராஜ் மற்றும் கிளை கழக செயலாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பூர்