தலைப்பு செய்திகள்
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகள் பெற்றனர். இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர்.
கோவில்பட்டி மாவட்டம் கருங்குளம் அதிமுக வடக்கு ஒன்றியத்தில் உள்ள புதிதாக பொறுப்பேற்ற கிளைச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
கருங்குளம் அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளருமான துணைச் சேர்மன் லட்சுமண பெருமாள்,தலைமையில் அதிமுகவில் புதிதாக பொறுப்பேற்ற 100ம் மேற்பட்ட கிளைச் செயலாளர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் ராஜூ இல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் பெற்றனர். இதற்கு முன்னதாக கயத்தார் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள புதிதாக பொறுப்பேற்ற 80க்கும் மேற்பட்ட கிளைச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துகள் பெற்றனர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், மருத்துவ அணி கோதண்டராமன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றியச் செயலாளர் ராமதாஸ், மணக்கரை கிளைச் செயலாளர்கள் சிதம்பரம், முத்துராஜா, கள்ள வண்டன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் லட்சுமண பெருமாள், கிளைச் செயலாளர் சங்கரநாராயணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் போர்டு சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.