BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் வகுப்புகள் மூலம் தடையில்லாமல் பள்ளி மாணவர்களின் திறனை வெளிகொண்டு வந்த தனியார் கல்வி நிறுவனங்கள்.

கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தடையில்லாமல் பள்ளி மாணவர்களின் திறனை வெளிகொண்டு வந்த தனியார் கல்வி நிறுவனங்கள் தற்போது பொருளாதார நெருக்கடியில் தவித்து வருவதால் அரசும், நீதிமன்றமும் தெரிவித்தது போல் கல்வி கட்டணத்தை பெற்றோர்கள் உரிய வழிவகை செய்து உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், TC இல்லாமல் எந்த ஒரு மாணவர்களையும் எவ்வகை பள்ளியிலும் சேர்க்க கூடாது எனவும் கன்னியாகுமரில் இன்று நடைப்பெற்ற தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில மாநாடு வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

FePSA என்ற தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 3 வது மாநில மாநாடு இன்று கன்னியாகுமரியில் நடைபெற்றது இதில் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட சங்க நிர்வாகிகள்,மாநில, மண்டல,மாவட்ட, கல்வி மாவட்ட மற்றும் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இம்மாநாடு மூலமாக அரசுக்கு 18 கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது, பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ஆறுமுகம் கூறுகையில்”
நர்சரி & பிரைமரி பள்ளிகள் அனைத்திற்கும் DTCP அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், நர்சரி&பிரைமரி பள்ளிகளுக்கு குறைந்த பட்ச இட வசதியை கட்டாயப்படுத்த கூடாது,கட்டண நிர்ணய குழுவை மாற்றி அமைத்து அரசு பள்ளிகளில் ஒரு மாணவருக்கு அரசு செய்யும் செலவு தொகையின் அடிப்படையில் அதே தொகையை தனியார் பள்ளி கட்டணமாக நிர்ணயம் செய்ய வேண்டும்,மேலும்,TC இல்லாமல் எந்த ஒரு மாணவரையும் எவ்வகை பள்ளியிலும் சேர்க்க கூடாது,கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் தடையில்லாமல் பள்ளி மாணவர்களின் திறனை வெளிகொண்டு வந்த தனியார் கல்வி நிறுவனங்கள் தற்போது பொருளாதார நெருக்கடியில் தவித்து வருவதால் அரசும், நீதிமன்றமும் தெரிவித்தது போல் கல்வி கட்டணத்தை பெற்றோர்கள் உரிய வழிவகை செய்து உடனடியாக செல்லுத்த வேண்டும் என்பது போன்ற 18 அம்ச கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளதாக மாநாடு வாயிலாக அரசுக்கு தெரிவித்துள்ளனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )