தலைப்பு செய்திகள்
தமிழகத்தில் 336 நடமாடும் மருத்துவமனை !
தமிழகத்தில் தற்போது தேர்தல் காரணமாக தடுப்பூசி முகாம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது மீண்டும் இன்று சனிக்கிழமை 24 ஆவது மெகா தடுப்பூசி முகாம் செயல்பட்டது. மொத்தமாக இன்று தமிழகத்தில் 50 ஆயிரம் தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை நடைபெறும் எனவும் இதில் முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள் சென்று செலுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டிருந்தது.
மேலும் தமிழகத்தில் மொத்தமாக முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதத்திற்கும் மேல் மக்கள் செலுத்தியுள்ளனர் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி 70 சதவீதத்திற்கு மேல் செலுத்தி உள்ளனர்.
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று கூடிய விரைவில் தமிழகத்தில் 336 நடமாடும் மருத்துவமனை முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்படும் எனவும் கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.