தலைப்பு செய்திகள்
பயங்கரம்.. பணம் கேட்டதால் மனைவியை கொன்று புதைத்த கணவன்.
பணம் கேட்டதால் முதல் மனைவியை கொலை செய்து புதைத்த கணவன் கைது செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் மாரியப்பன் (30). இவர், ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். மாரியப்பனும் அதே தெருவைச் சேர்ந்த தெருவை சேர்ந்த பிரேமா (24) என்ற இளம்பெண்ணும் காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருதரப்பு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து கணவன்- மனைவி இருவரும் ஊரில் இருந்து சென்னை சென்று வாடகை வீட்டில் வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் கடந்த 2020ஆம் ஆண்டு பிரிந்தனர். இதில், மாரியப்பன் 2ஆவது திருமணம் செய்து கொண்டார். எனினும் அதன்பிறகு, தனது முதல்மனைவி பிரேமாவுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு இருவரும் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த 2ஆவது மனைவி மாரியப்பனை பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் பிரேமா, மாரியப்பனிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன், கடந்த 9ஆம் தேதி பிரேமாவை அழைத்துக் கொண்டு திருக்குறுங்குடி வந்து அங்குள்ள பெரியகுளத்திற்கு சென்றார்.
அங்கு திடீரென பிரேமாவின் கழுத்தை துண்டால்நெரித்து கொலை செய்து, குளத்தில் குழி தோண்டி சடலத்தை புதைத்து விட்டு திரும்பியுள்ளார். பிரேமா மாயமானது குறித்து உறவினர்கள் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சந்தேகத்தின்பேரில் மாரியப்பனை பிடித்து விசாரித்தபோது, முதல் மனைவியை கொன்று புதைத்ததை ஒப்புக் கொண்டார். அவரை கைது செய்த போலீசார், சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்