தலைப்பு செய்திகள்
கோவில்பட்டியில் 15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள வ.உ.சி நகர் பகுதியில் உள்ள 3வது தெரு ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்பிரிவு காவலர் சேதுராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.
குட்கா பான்பராக் புகையிலை தடுப்பு சிறப்பு காவல்துறையினர் பெட்ரிக்ராஜன், மணிகண்டன், தலைமையில் போலீசாருக்கு தகவலின் பேரில் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், உத்தரவின் பேரில் அங்கு சென்ற கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, துணை ஆய்வாளர் அரிகண்ணன் சோதனை செய்ததில் அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 60 மூட்டை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு 15 லட்ச ரூபாய் பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த உத்தம்சிங் ,மேகாசிங் ஆகிய இருவரை கைது செய்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.