BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருச்சி சமயபுரம் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி – வியாபாரியை மீட்டு போலீசார் விசாரணை.

சக்தி ஸ்தலம் என போற்றப்படும் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் திருச்சி மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். இதன் காரணமாக கோவிலை சுற்றி அகல் விளக்கு, கடலை, பொரி, பித்தலை பொருட்கள், கடவுளின் உருவப்படங்கள், பழக்கடைகள் பூக்கடைகள் என பல கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதிகளில் தள்ளுவண்டியில் கடைகள் அமைத்து பலர் வியாபாரம் செய்து வருகின்றனர்.

சமயபுரம் கோவில் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோவில் பகுதியில் தள்ளுவண்டியில் பொரிகடலை வியாபாரம் செய்து கொண்டிருந்த திருச்சி மாவட்டம், வி.துறையூர் கிராம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் (35) என்பவரிடம் அங்கு கோவில் இணை ஆணையர் கல்யாணி இந்த பகுதியில் தள்ளுவண்டி கடை போடக்கூடாது எனக் கூறியதுடன் அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்களிடம் உடனே அப்புறப்படுத்துமாறு
கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, காவலர்கள் அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், ஆத்திரமடைந்த கணேசன் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தின் முன்பு தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு அலுவலகத்தின் உள்ளே சென்று தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சமயபுரம் காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு காவல்நிலையம் அழைத்து சென்று அவரிடம் விசாரணை
மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )