தலைப்பு செய்திகள்
நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சி திருச்சியில் நீக்கப்பட்ட ரசிகர் மன்ற தலைவர் உடன் ரகசிய ஆலோசனை.
நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனரமான எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற கட்சி தொடங்கிய போது திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே.ராஜா என்ற பத்மநாபனை கட்சியின் பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர் நியமித்தார்.
தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் ஆரம்பித்து அதில் முழுமூச்சாக ஈடுபட்டு செயல்பட்டு வந்தார் இதைத்தொடர்ந்து விஜய் ரசிகர்கள் அரசு ஈடுபட துவங்கினர். அப்போது ஏற்பட்ட சில பிரச்சினைகளில்
ஆர்.கே.ராஜா அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.
நீக்கப்பட்ட அவர் மீது இடம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்டு காவல்துறை வழக்கு பதிவு செய்தனர்.
தலைமறைவான அவர் தொடர்ந்து நீதிமன்றம் மூலம் சரணடைந்தார் இப்படி அப்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்தார். ஆர்கே ராஜாவின் ஆதரவாளர்கள் தொடர்ந்து அவரை திருச்சி மாவட்ட தலைவராக நியமிக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் இதுவரை அவர் விஜய் மக்கள் இயக்கத்தில் மீண்டும் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில் ஆர்.கே.ராஜாவின்
தாயார் சமீபத்தில் காலமானார். இன்று திருச்சிக்கு வந்த நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆர்.கே.ராஜா வீட்டிற்கு சென்று அவரின் தாயார் உருவபடத்திற்கு
மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் ஆர்.கே.ராஜாவிடம் அவர் ரகசிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கம் பற்றியதாக இருந்திருக்கும், மீண்டும் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருக்கும் என விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஆர்.கே.ராஜா தனது முகநூல் பக்கத்தில்
கடவுளை பார்க்கலாம் என்று காத்திருந்தேன். தற்போது பூசாரி வந்து விட்டார். கருவறை நிச்சயம் திறக்கும், கடவுளை சந்திப்பேன் என்ற
100சதவீத நம்பிக்கை வந்து விட்டது என தொிவித்துள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்திருப்பதை பார்த்தால் விரைவில் நடிகர் விஜய், ஆர்.கே.ராஜா சந்திப்பு இருக்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தொிவிக்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.