தலைப்பு செய்திகள்
ஏவுகணை: இந்தியாவுக்கு பதிலடி கொடுத்திருக்க முடியும்.. ஆனால் சும்மா விட்டோம். இம்ரான்கான் சொல்கிறார்.
டெல்லி: இந்திய ஏவுகணை தவறுதலாக விழுந்த விவகாரத்தில் உடனே பதிலடி கொடுத்திருக்க முடியும்; ஆனால் பொறுமை காக்கிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருக்கிறார்.
இந்திய ஏவுகணை பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது பெரும் சர்ச்சையானது. இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. மேலும்இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் அரசு அழைத்து எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் இத்தகைய அலட்சியத்தால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் மிரட்டல் விடுத்தது பாகிஸ்தான்.
இதையடுத்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில், பராமரிப்பு பணியின் போது இந்திய ஏவுகணை தவறுதலாக விண்ணிப் பாய்ந்தது. பாகிஸ்தான் எல்லையில் விழுந்த இந்த ஏவுகணையால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது ஆறுதல் தரக் கூடியது. இது வருத்தத்துக்கு உரியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் இதை பெரிதுபடுத்திக் கொண்டே இருக்கிறது. பாகிஸ்தானின் ஹபீசாபாத் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் இம்ரான் கான் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். அக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், இந்திய ஏவுகணை பாகிஸ்தானில் விழுந்ததற்கு உடனே பதிலடி கொடுத்திருக்க முடியும். ஆனால் பொறுமையாக இருந்துவிட்டோம். ராணுவத்தையும் தேசத்தையும் வலிமையடைய செய்ய வேண்டும் என்றார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.