தலைப்பு செய்திகள்
TNTET EXAM: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்- கடைசி தேதி ஏப்ரல்.13
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TNTET- டெட்) இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 13 என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு டெட் எனப்படும் தகுதித் தேர்வில் தேச்சி பெறுவது கட்டாயம். தமிழகத்தில் 2012-ம் ஆண்டு முதல் டெட் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இத்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board)
டெட் தேர்வு எழுதி மொத்தம் 95,000 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் 25,000 பேருக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து டெட் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தன. நடப்பாண்டு கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து டெட் தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த 7-ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தேர்வுக் கட்டணம் ரூ500. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வுக் கட்டணம் ரூ250. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 13-ந் தேதி கடைசி நாள்.
டெட் தேர்வானது 2 தாள்களைக் கொண்டது. இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தாள் 1 எழுத வேண்டும். பிஎட் முடித்தவர்கள் தாள் 2 எழுத் வேண்டும். தற்போதைய நிலையில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்று மட்டுமே ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. டெட் தேர்வு எப்போது என்பது அறிவிக்கப்படவில்லை. இத்தேர்வை நேரடி தேர்வாக நடத்துவதா? ஆன்லைன் தேர்வாக நடத்துவதா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்படும். 2019-ம் ஆண்டு டெட் தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதினர். நடப்பாண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.