தலைப்பு செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி பேருந்துநிலையத்தில் இணையதள குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி பேருந்துநிலையத்தில் இணையதள குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவகையில் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் தற்போதைய நவீன குற்றங்களாக இணையதள குற்றங்கள் அதிகரித்து வருகிறது குறிப்பாக அலைபேசிகளில் அழைத்து வங்கி இரகசிய குறியீடு கேட்பது திருமண தகவல்நிலையம் மூலம் அலைபேசி எண்களை எடுத்து குற்றசெயல்களில் ஈடுபடுவது அதிகமாக நடைபெற்றுவருகிறது. இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் இணையதள குற்றங்களை தடுக்கும் வகையில் இணையதள குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் வைத்து நடைபெற்றது இந்த முகாமில் கலந்து கொண்ட மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பொதுமக்களிடம் இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினார்.
அதைதொடர்ந்து பேருந்து நிலையவளாகத்தில் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டினார் அதேபோல் ஆட்டோக்களிலும் பேருந்துகளிலும் இணையதள குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு வில்லை ஒட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார்.
அதை தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் குமரி மாவட்டத்தில் பதிவாகும் குற்றங்களில் தற்போது நவீன குற்றமாக இணையதள குற்றசெயல்கள் அதிகரித்து வருவதாகவும் அதிகமாக படித்தவர் கொண்ட மாவட்டத்தில் வேலைகளுக்காக காத்திருப்பவர்களிடம் இந்த இணையதள மோசடி கும்பல்கள் மோசடி செயல்களில் ஈடுபடுவதாகவும், இது குறித்து பொதுமக்களிடம் அதிகம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வு முகாம் துவங்கபட்டுள்ளதாகவும் கூறினார் மேலும் மத மோதல்களை தடுக்க முன்கூட்டிய விழிப்புடன் காவல்துறை செயல்படும் எனவும் எனினும் சிறப்பு படை அமைத்தால் விரைவாக மத மோதல்களை தடுக்க முடியும் என்பதால் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
