தலைப்பு செய்திகள்
தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்: 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.
17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
மத்திய அரசு பணியிலிருந்து திரும்பிய அஸ்ரா கார்க் தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த பிரேம் ஆனந்த் சின்ஹா வடக்கு மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகர காவல்துறை ஆணையராக டி.செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்மண்டல ஐஜியாக இருந்த அன்பு, சென்னை வடக்கு கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
CATEGORIES Uncategorized