BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஒலிம்பிக் வீரர்களை உருவாக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு.

ஒலிம்பிக் வீரர்களை 
உருவாக்க ரூ.25 கோடி ஒதுக்கீடு #TNBudget2022

தமிழகத்தில் ஒலிம்பிக் வீரர்களை உருவாக்க 25 கோடி ரூபாய் தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக நிதிநிலை அறிக்கையில், “ஒலிம்பிக் வீரர்களை தமிழகத்தில் உருவாக்க ‘தமிழக ஒலிம்பிக் பதக்க தேடல் திட்டம்’ செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதற்கு 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்” என்று கூறினார். “வடசென்னை இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு விளையாட்டு வளாகம் அமைக்கப்படும். முதற்கட்டமாக சென்னை ஆர்.கே.நகரில் இதற்கான வளாகம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவமனைகளை புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைகளாக மேம்படுத்த முடிவு செய்யப்படும்” என்று சட்டப்பேரவையில் அவர் கூறினார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )