BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓபிஎஸ், ஈபிஎஸ்சுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

அதிமுக உட்கட்சி தேர்தல்: ஓபிஎஸ், ஈபிஎஸ்சுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்பட இரண்டு பேர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க அதிமுக மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இந்த பதவிகள் அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் கூறி கட்சி உறுப்பினர்களான ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும், கடந்த டிசம்பர் மாதம் நடந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

அதிமுகவுக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரி ராம்குமார் ஆதித்தன் உள்பட இரண்டு பேரும் தாக்கல் செய்த மனு, நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதிலளிக்கும்படி, அதிமுகவுக்கும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )