தலைப்பு செய்திகள்
மனைவி மற்றும் குழந்தைகளை கொன்ற கொடூரன்.
நாகை மாவட்டம் அருகே தந்தையே தன் மனைவி மற்றும் இரு மகள்களையும் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாகை மாவட்டம் அருகே புதுச்சேரி கிராமத்தை சார்ந்தவர் லக்ஷ்மணன் இவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள்கள் வினோதினி அக்ஷயா ஆகியோருடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மூத்த மகள் வினோதினி பள்ளிக்கு செல்லும் போது வாலிபர் ஒருவரை காதலித்துள்ளார். மூன்று மாதத்திற்கு முன்பு வினோதினியும் அவரது காதலனும் காதல் திருமணம் செய்து கொண்டனர் மூத்த மகள் 18 வயது ஆகிய நிலையில் மகள் காதல் திருமணம் செய்து கொண்டது தந்தை லட்சுமணனுக்கு பிடிக்கவில்லை.
இந்நிலையில் மன உளைச்சல் காரணமாக தன் மனைவியும் இரு மகள்களையும் தலையில் கல்லை போட்டு கொலை செய்து கொண்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் போலீசார் கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர்.