BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு.: பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பழனிவேல் தகவல்.


சென்னை: பள்ளிக் கல்வி துறைக்கு ரூ.36,895.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார். தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிதியமைச்சர் பழனிவேல் கல்வி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

* நாட்டுக்கே முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்படும் இல்லம் தேடிக்கல்வி திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* அரசு பள்ளிகளில் 6 – 12 வரை படித்து உயர் கல்வியில் சேரும் (பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி) அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

* மாதம் ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக ரூ.698 கோடி ஒதுக்கீடு.

* அம்மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும், மாதம் ரூ.1000 வழங்கப்படும்.

* அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்தும் வகையில் அன்பழகன் பெயரில் திட்டம் அறிவிப்பு, புதிய கட்டிடங்கள் கட்ட ரூ.1300 கோடி ஒதுக்கீடு.

* பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

* 15 மாவட்டங்களில் முன் மாதிரி பள்ளிகள் தொடங்குவதற்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு.

* அரசு பள்ளி அல்லாத பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கம் இலவச பாட புத்தகங்கள் வழங்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

* மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி திட்டத்திற்கு ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு.

* சத்துணவு திட்டத்துக்கு ரூ.1,949 கோடி நிதி ஒதுக்கீடு.

* அரசு பள்ளிகளில் 18,000 வகுப்பறைகள் கட்டப்படும்

* ஸ்மார்ட் வகுப்பறை, கணினி ஆய்வகங்களுடன் ரூ.7,000 கோடியில் பள்ளிகள் நவீனப்படுத்தப்படும்.

* புத்தக வாசிப்பை ஊக்குவிக்க அனைத்து மாவட்டங்களிலும் ரூ.5.6 கோடியில் புத்தகக் காட்சிகள்.

* அரசு கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.205 கோடி ஒதுக்கீடு.

* இந்த ஆண்டு பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.1,300கோடி ஒதுக்கீடு.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )