தலைப்பு செய்திகள்
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கியதை வரவேற்கிறோம்! அரசுப் போக்குவரத்துக் கழக செலவினங்கள் முழுவதையும் அரசே பொறுப்பேற்க வேண்டுகிறோம்!! நிதிநிலை அறிவிப்பில் போக்குவரத்து ஏஐடியூசி கருத்து!
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு தனியாக நிதி ஒதுக்கியதை வரவேற்கிறோம்! அரசுப் போக்குவரத்துக் கழக செலவினங்கள் முழுவதையும் அரசே பொறுப்பேற்க வேண்டுகிறோம்!! நிதிநிலை அறிவிப்பில் போக்குவரத்து ஏஐடியூசி கருத்து!!! தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித்துறை, அரசு மருத்துவமனைகள் தரம் உயர்த்துதல், மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், இலவச பாடப் புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிதிநிலை அறிவிப்புகள் வரவேற்கக் கூடியது. அரசு போக்குவரத்து கழகங்களுக்கு சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் பொழுது தனியாக நிதி ஒதுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து ஏஐடியூசி சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்து கழகங்களுக்கு ரூ1,320 கோடி ரூபாய் நிதி வழங்கியது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். அதேபோல் மகளிர் இலவச பயண திட்டத்திற்கு இந்த ஆண்டு1520 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதையும் வரவேற்கிறோம்.
மகளிர் இலவச பயண திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்தந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு பெண்கள் இலவச பயணத்திற்கு ஆகும் செலவினங்கள், மற்றும் ஓட்டுனர் நடத்துனர் படித்தொகை உள்ளிட்ட செலவினங்களை ஈடுகட்டும் வகையில் போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மூலம் அளிக்காமல், நேரடியாக வழங்கிட வேண்டும், அதேபோல் ஏறத்தாழ 2,213 நவீன டீசல் பேருந்துகளும், 500 இ பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படுவது வரவேற்கக் கூடியது. தற்போது தமிழ்நாடு முழுவதும் தடத்தில் ஓடிக்கொண்டிருக்கின்ற பழைய பேருந்துகளுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் இயக்கப்படுவதற்கு முன்மாதிரியாக தற்போது கொள்முதல் செய்யப்படும் பேருந்துகளை விட கூடுதலாக இன்னும் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட வேண்டுமென்று சுட்டிக்காட்டுகிறோம். திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர், கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட போக்குவரத்துக் கழகம் தற்போது திமுக கட்சியின் தலைவரான முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஐம்பதாண்டு ஆண்டு பொன் விழா கண்டுள்ளது சிறப்பிற்குரியது.. தமிழ்நாட்டை ஆண்ட இரு முதல்வர்களும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் பொது மக்களின் சேவைக்காக இயக்கப்படும் சேவைத்துறை ஆகும் என்றும், அதற்கு ஆகும் செலவினங்கள் முழுவதையும் அரசே ஏற்கும் என்று சட்டமன்றத்தில் அறிவித்துள்ளனர். ஐம்பதாண்டு கால பொதுச்சேவையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தற்போது சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு மின் இழப்பு மற்றும் இலவச மின்சார மானியத்தொகை உள்ளிட்டு அனைத்து செலவினங்களையும் 100% சதவீதம் அரசே ஏற்கிறது என்று அறிவித்தது போல் அரசு போக்குவரத்து கழக கடன் மற்றும் செலவினங்கள் தொகை முழுவதையும் அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று இந்த நேரத்தில் சுட்டிக்காட்டுகிறோம்.
நிதிநிலை அறிக்கையில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஓய்வூதியர்கள் சுமார் 86 ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களும் நிதிநிலையில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்திருந்த
அரசே பென்சனை ஏற்று நடத்தும் என்ற அறிவிப்பும், அகவிலைப்படி 76மாத கால உயர்வு நிலுவையில் உள்ளதை அறிவித்து ஓய்வூதியத்துடன் இணைப்பது , நிலுவைத் தொகை வழங்குவது என்ற அறிவிப்பும்,இலவச மருத்துவ காப்பீட்டு திட்டஅறிவிப்பு, தொழிலாளர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட எந்தவிதமான அறிவிப்பும் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றமளிப்பதாக உள்ளது என்று ஏஐடியுசி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. துரை.மதிவாணன், சம்மேளன துணைதத்லைவர், அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனம்,ஏஐடியூசி .
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.