தலைப்பு செய்திகள்
வரும் 1ம் தேதி முதல் அமல். உணவுப் பொருட்களின் விலை10% உயர்வு.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில், சமையல் எண்ணெய் விலையும் திடீரென பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்த உரிமையாளர்கள் முடிவு செய்திருந்தனர். ஏற்கனவே எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் வடை, பூரி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலையை சிறிய அளவிலான ஹோட்டல்கள் உயர்த்தியுள்ளன.
இந்நிலையில், எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை உயர்த்துவது குறித்து பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அந்தக் கூட்டத்தில் சமையல் எண்ணெய் விலை உயர்வு காரணமாக அசைவ உணவுகள், எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் உணவுகள் தயாரிக்க அதிக செலவு ஆவதால், உணவுகளின் விலையை உயர்த்த வேண்டும் என்று உரிமையாளர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலையை 10 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக பெங்களூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ராவ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.