தலைப்பு செய்திகள்
நாளை வேளாண் பட்ஜெட். வரும் 24ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர்.
வரும் 24-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இன்றைய பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், வரும் 24-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். இன்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாளை (19-ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
வரும் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். வரும் 24-ம் தேதி, பட்ஜெட் மீதான விவாதத்துக்கு முதல்வர் பதில் அளித்து பேசுவார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.