BREAKING NEWS

தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியில் இறந்து பல நாட்களாகி அழுகிய நிலையில் காட்டுப்பன்றி.

தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியில் இறந்து பல நாட்களாகி அழுகிய நிலையில் காட்டுப்பன்றி.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஆற்றில் தலையனை பகுதியிலிருந்து வடக்கோடை மேல்அழகியன் கால்வாய் விவசாய பாசனத்திற்காக செல்கிறது.

மேற்படி கால்வாய் பாபநாசம் மற்றும் பொதிகையடி வழியாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி செல்கிறது. மேற்படி கால்வாயில் மன்னனை என்ற இடத்தில் ஆற்று நீர் மேல் பகுதியிலும் கால்வாய் நீர் கீழ்பகுதியில் செல்வதற்காக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பாலத்தின் மேலே காட்டுப்பன்றி ஒன்று இறந்து பல நாட்களாகி அழுகிய நிலையில் உள்ளது. மேற்படி கால்வாயில் பெரியவர்கள் முதல் சிறியவர் வரை குழந்தைகள் அனைவரும் குளிக்கின்றனர், இதனால் பெரும் தொற்று ஏற்பட்டு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மேற்படி இறந்துள்ள காட்டுப்பன்றி அப்புறப்படுத்தி சுகாதாரத்தை ஏற்படுத்தி தருமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். PM. பால்ராஜ். இந்து முன்னணி. விக்கிரமசிங்கபுரம்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )