திண்டுக்கல் -பிஜேபி சட்டமன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா சட்டமன்ற அமைப்பாளர் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் ஆர் எம் காலனி 80 அடி ரோட்டில் சட்டமன்ற அமைப்பாளர் கார்த்திக் வினோத் தலைமையில் சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் இணை அமைப்பாளர் மல்லிகா வரவேற்புரை நிகழ்த்தினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் பேராசிரியர் கதலி நரசிங்க பெருமாள் கலந்து கொண்டு பேசியதாவது…
வெகு விரைவில் 2024க்கான பாராளுமன்றத் தேர்தல் இன்னும் சில தினங்களில் வரவிருப்பதை முன்னிட்டு விரைவில் பாராளுமன்ற வேட்பாளர் அறிவிக்கப்படுகின்ற சூழலில் இதனை அனைத்து கட்சிகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். முன்னதாக நாடு முழுவதும் குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 196 வேட்பாளர்கள் பிரதமர் உட்பட… முன்னணி தலைவர்கள் உட்பட… பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிமுகம் செய்திருந்தனர்… மேலும் இந்தியாவில் இன்று முன்னணி கட்சிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறது .
அது மட்டுமல்லாது இன்னும் சில தினங்களில் இரண்டாவது பட்டியல் வெளியிட போவதாகவும் அதே சமயம் அதிமுக வை பின்னுக்கு தள்ளியும் பிஜேபி கட்சி திமுக கட்சிக்கு இணையாக ஒரு வலுவான கட்சியாக இடம்பெறும் என்பதில் ஐயமில்லை என கூறினார்.,. இந்நிகழ்வில் உடன் மதுரை பெருங்கோட்ட அமைப்புச் செயலாளர் நாகராஜன், திண்டுக்கல் பாராளுமன்ற அமைப்பாளர் தனபாலன், இணை அமைப்பாளர் கனகராஜ், தொகுதியின் பார்வையாளர் மகாலட்சுமி, கிழக்கு மாவட்ட பார்வையாளர் ரவி ,பாலா, திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் மலைச்சாமி, மற்றும் தொகுதியின் மண்டல தலைவர்கள் ரமேஷ் ,செந்தில் பால்ராஜ் ,சதீஷ், முருகேசன், காளியப்பன் மற்றும் மாவட்ட மண்டல கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்புத்தனர். இந்நிகழ்வில் இறுதியாக கிழக்கு ஒன்றியங்களைச் சேர்ந்த நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட புதிய நபர்கள் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டனர். பின்னர் சதீஷ்குமார் நன்றி உரை ஆற்றினார்.