BREAKING NEWS

திருக்கடையூர் அபிராமி அம்|மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி உறவினர்கள் பங்கேற்பு.

திருக்கடையூர் அபிராமி அம்|மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி உறவினர்கள் பங்கேற்பு.

திருக்கடையூர் அபிராமி அம்|மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவரது மனைவி உறவினர்கள் பங்கேற்பு ஆலய தரிசனம் செய்து வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தர்மபுரம் ஆதினதுக்கு சொந்தமான உலகப் பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் இரண்டாவது மகள் சங்கமித்ராவின் மாமனார் தனசேகரன் 60 வயது பூர்த்தியை முன்னிட்டு அறுபதாம் திருமணம் எனப்படும் சஷ்டியப்த பூர்த்தி விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தனசேகரன் கலைவாணி தம்பதியினருக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் அறுபதாம் கல்யாணம் நடைபெற்றது.

இதற்காக சிறப்பு ஹோமங்கள் வளர்க்கப்பட்டு கலச நீர் கொண்டு தம்பதியினருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து மாலை மாற்றும் வைபவம் மற்றும் மாங்கல்ய தாரான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திருக்கடையூர் வருகை தந்த டாக்டர் அன்புமணி ராமதாஸ் சௌமியா தம்பதியினருக்கு ஆலய நிர்வாகம் சார்பில் கோயில் உள்துறை செயலாளர் விருத்தகிரி வரவேற்பு அளித்தார் தொடர்ந்து சுவாமி அம்பாள் சன்னதிகளை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். உறவினர் நிகழ்ச்சி என்பதால் அரசியல் பேச விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார்.

Share this…

CATEGORIES
TAGS