திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் திருக்கோயிலில் வைகாசி விசாகப்பெருவிழா வெள்ளி பல்லக்கில் சுவாமி வீதியுலா திரளான ஓர் தரிசனம்
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூரில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்பாள் சமேத முல்லை வனநாதர் திருக்கோயில் வைகாசி விசாக பெருவிழா வெகு விமர்சையாக நேற்று முன்தினம் காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் இரண்டாவது நாளான நேற்று ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் மற்றும் முல்லை வன நாதர் விஷேச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இரவு அம்பாள் வெள்ளி பல்லக்கில் வீதியுலா காட்சியும் மற்றும் பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன கலை நிகழ்ச்சிகளை ஏராளமான பக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கண்டு களித்தனர்கொண்டனர். வைகாசி விசாக பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக 20-ந்தேதி இரவு சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவமும், 22-ந்தேதி காலை திருத்தேரோட்டமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் செயல் அலுவலர்
இரா. விக்னேஷ் மேற்பார்வையில் திருக்கோயில் பணியாளர்கள், விழா குழுவினர், கிராமவாசிகள் செய்து வருகின்றனர்.