BREAKING NEWS

திருக்கோவிலூரில் கையுந்து பந்து மற்றும் கைப்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

திருக்கோவிலூரில் கையுந்து பந்து மற்றும் கைப்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் அங்கவை சங்கவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அருகே உள்ள விளையாட்டு மைதானத்தில் கையுந்துபந்து மற்றும் கைப்பந்து கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் உடற்கல்வி இயக்குனர் சுதர்சன் ராஜகம்பீரம், உடற்கல்வி ஆசிரியர்கள் மலர்கொடி , காமராஜ் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த கோடைகால சிறப்பு முகாமில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிறப்பாக பயிற்சி பெற்றனர்,பின்னர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கிடையே கைப்பந்து போட்டிகள் நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன.

கையுந்து பந்து விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு முதல் பரிசினை நகரத் தலைவர் வழங்கினார் இரண்டாவது பரிசினை துணைத் தலைவர் வழங்கினார் மூன்றாவது பரிசினை திமுக நகர செயலாளர் கோபி வழங்கினார்.

கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.T.G.கணேஷ் தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர் 50,000 மதிப்புள்ள கோடைக்கால சிறப்பு பயிற்சி சீருடையை மாணவிகளுக்கு வழங்கினார்.மேலும் விளையாட்டு வீராங்கனைகளுக்கு சுவையான மதிய உணவு வழங்கினார்.

CATEGORIES
TAGS