திருக்கோவிலூர் அருகே விநாயகரை எடுத்து செல்ல முற்பட்டதால் பிரச்சனை போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள விளந்தை கிராமத்தில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிக்குள் விநாயகரை எடுத்துச் செல்ல முற்பட்டதால் பிரச்சனை ஏற்பட்டு பதட்டமான சூழ்நிலை நிலவியது,மேலும் ஆண்டுதோறும் ஏரியில் விநாயகர் சிலை கரைப்பது வழக்கமாக உள்ள நிலையில் அதற்கு மாறாக ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றொரு சமூகத்தினர் வசிக்கும் பகுதி வழியாக சென்று தென்பெண்ணை ஆற்றில் கரைக்க வேண்டும் என கூறுவதால் இரு தரப்பினரிடையே பிரச்சனைகள் ஏற்பட்டது.
இதனை அடுத்து மணலூர்பேட்டை போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு இருதரப்பு பொது மக்களிடம் தொடர்ந்து சமாதான பேச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்,இதனால் விளந்தை கிராமத்தில் குமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பதட்டமான சூழ்நிலை நிலவியது,மேலும் அந்த கிராமத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாத வண்ணம் திருக்கோவிலூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோஜ் குமார் தலைமையான போலீசார் 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.