திருச்சியில் தொடரும் கந்து வட்டி மற்றும் சொத்து அபகரிப்பு பாஜக-வினரை கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்

திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுக்கா, காட்டுப்புத்தூர், குளத்துப்பாளையத்தை பூர்விகமாக வசித்து வந்த K.P.சங்கரன் (வயது 77) தற்போது நாமக்கல், கந்தம்பாளையத்தில் தனது மகள் வீட்டில் வசித்து வருவருகிறார். இவரது சொத்தை அபகரிக்கவும் அல்லது சுமார் 8 லட்சத்திற்கு மேல் பணம் தர வேண்டும் என்றும் K.P.சங்கரன் என்பவரின் கையெழுத்தை போலியாக போட்டு அவரது கைரேகையை அவர்களே வைத்து அந்த கைரேகையும் சோதனை செய்ய முடியாதபடி அழித்து போர்ஜரி மற்றும் பித்தலாட்டம் செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது சம்பந்தமாக சேலம் சரக டிஐஜி அவர்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நில உரிமையாளர் சங்கரன்
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காட்டுப்புத்தூர், சீத்தப்பட்டியை சேர்ந்த செல்லப்பன் மகன் S.நந்தகுமார் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த செல்ல முத்து மகன் சுரேஷ், அதே மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் கிருஷ்ணன் ஆகிய மூவரும் கூட்டு சதி செய்து போலியான ஆவணங்களை தயார் செய்து, 77 வயதான முதியவரின் சொத்தை அபகரிக்கும் நோக்கத்துடனும், கடன் வாங்கியதாகவும், புனையப்பட்ட போலியான ஆவணங்களை வைத்து நாமக்கல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சம்பந்தமாக மிகுந்த மன உளைச்சலுடனும் இருந்து வருவதாகவும்.
இந்த மூன்று நபர்களிடம் நான் எந்த கையெழுத்தும் போட்டு எனது இடது பெருவிரல் ரேகை வைத்து நான் பணம் வாங்கவில்லை என்றும், இவர்கள் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பல்வேறு உடல் உபாதைகளுடன் நான் வயது முதிர்ந்த இருக்கும் இந்த நிலையில் எனது பெயருக்கும், எனது புகழுக்கும் கேடு விளைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள் என்றும் இவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று புகாரியில் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
பா.ஜ.க நிர்வாகி நந்தக்குமார்
தற்போது இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த ப்ரோ நோட் கையப்பம் மற்றும் கைரேகை அனைத்தும் போலி என்று மாண்புமிகு நீதி அரசரின் தீர்ப்பு வந்தவுடன், மாண்புமிகு நீதி அரசர் அவர்கள் இந்த போலியான வழக்கை தொடர்ந்தது பொன்னான நீதி அரசரின் நேரத்தை வீணடித்ததும் இல்லாமல், நீதி அரசரையே ஏமாற்ற முயற்சித்த குற்றத்திற்காகவும் 77 வயது முதியவரின் சொத்தை அபகரிக்க திட்டமிட்டதாகவும், இந்த தள்ளாத வயதில் அவரை அலையடித்ததற்காகவும் போலியாக வழக்கு பதிவு செய்த மூன்று நபர்களும் K.P.சங்கரன் அவர்களுக்கு குறைந்தபட்சம் தலா 50 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இந்த மூவருக்கும் கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட வேண்டும்.
இந்த மாதிரி போலி போர்ஜரி ஆசாமிகளுக்கு இதுவே தக்க பதிலடியாகவும், தக்க தண்டனையாகவும் இருக்க வேண்டும் என்று பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் இதை அறிந்து தெரிவிப்பதாக தெரிகிறது.
இந்தப் புகார் மனு எண்.: G2/5052/2023 PGR/327/DIGSLM (R)2023 சம்பந்தமாக நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி நந்தகுமார் போன்றவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுப்பார்களா?.