திருச்சி
திருச்சிக்கு விமானத்தில் வந்த இரண்டு பயணிகளிடம் 2 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் அதிகாரிகள் தீவிர விசாரணை.
துபாயிலிருந்து நேற்று இண்டிகோ விமானம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த நூற்றுக்கு மேற்பட்ட பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது 2பயணிகள் கொண்டு வந்த பைகளை சோதனையிட்ட போது அவர்கள் கொண்டு வந்த பைகளில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு அறைக்குள் 2கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தனர்.
அந்த பைகளை ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்ய போது தங்கம் இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அதிகாரிகள் பையில் இருந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சென்னை சேப்பாக்கத்தை சேர்ந்த நஷீர்கான் முகமது, மற்றும் சென்னை ராயபுரம் லுக்மான் என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இவர்கள் தங்க கடத்தல் ஈடுபட்ட படுவார்களா அல்லது பணத்திற்காக தங்கத்தைக் கொண்டு வந்தனரா மேலும், அதிக விலை மதிப்புள்ள தங்கத்தை கொடுத்து அனுப்பியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.