திருச்செங்கோட்டில் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய இருவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார்
நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்கறிஞர்கள் 140க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் இன்று முதல் ஈடுபட்டுள்ளனர்….
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வழக்கறிஞர்கள் 140 பேர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குற்றவியல் வழக்கறிஞராக பணிபுரிந்து வருபவர் பொன்மணி இவர் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்திற்கு சென்று வரும் வழியில் நின்றிருந்த இருவர் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசியதாக தெரிய வருகிறது இதனை வழக்கறிஞர் பொன்மணி கண்டித்துள்ளார் இதனை அடுத்து திருச்செங்கோடு வழக்கறிஞர் சங்கத்தில்.
இது தொடர்பாக புகார் செய்துள்ளார் இந்த புகார் தொடர்பாக ஆலோசனை செய்த சங்க நிர்வாகிகள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணாவை பார்த்து புகார் அளித்துள்ளனர் இந்த புகாரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார் இதனை அடுத்து நேற்று இரவு திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறையினர் காலம் கடத்தி வந்ததை அடுத்து இன்று வழக்கறிஞர்கள் கூட்டுக்குழு கூடி காலவரையற்ற நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்து.
இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய திருச்செங்கோட்டை சேர்ந்த சங்கர் மற்றும் மொளசி பகுதியை சேர்ந்த நவநீதன் ஆகிய இருவரும் பொய் புகார்களை அதிகாரிகள் மீது போடுவது அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துவது கட்டப்பஞ்சாயத்து செய்வது என பல்வேறு மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது இது குறித்து குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் சரவணராஜ் கூறும்போது சங்கர் மற்றும் நவநீதன் ஆகிய இருவரும் அதிகாரிகளை மிரட்டுவதும் கட்டப்பஞ்சாயத்து செய்வதும் அரசு அலுவலகங்களில்.
பல்வேறு வேலைகளை முடித்துக் கொடுக்கிறேன் என்று பணம் பெறுவதும் என பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர் எங்களது வழக்கறிஞர் நகர காவல் நிலையத்திற்கு சென்று திரும்பும் போது வழக்கறிஞர்கள் பற்றி தரை குறைவாக பேசியது தெரியவந்துள்ளது இதனை எங்கள் சங்கத்தில் புகாராக செய்தார் நாங்கள் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கூறினோம் அவர் குறிப்பிட்ட காவல் நிலையத்தில் புகார் செய்யும் படி அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் செய்தோம் புகார் செய்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டுக்குழு கூடி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம் அந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் தக்க தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் இதற்கு காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டுக்குழு மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பாக முடிவெடுத்து அவர்களது வழிகாட்டுதலின்படி போராட்டம் தொடரும் எனக்கு கூறினார்