திருத்தணி பொன்பாடி போக்குவரத்து சோதனை சாவடியில் அதி வேகத்துடன் போலீஸ் சைரன் பயன்படுத்தி வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த கார் சிறை பிடிப்பு.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பொன்பாடி போக்குவரத்து சோதனை சாவடியில் சுய பயன்பாட்டுக்காக முறைகேடாக போலீஸ் ஸ்டிக்கரை மற்றும் போலீஸ் சைரன் பயன்படுத்தி அதிவேகமாக சென்னையை நோக்கி செல்ல முயன்ற ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சொந்த பயன்பாட்டு சொகுசு காரினை திருத்தணி போக்குவரத்து ஆய்வாளர் சுமேஷ் நாராயணன் அவர்கள் மடக்கி காரில் வந்தவர்களை
விசாரித்த போது நாங்கள் போலீஸ் என்றும் இது போலீஸ் வாகனம் என்றும் முன்னுக்கும் பின்னுக்கும் முரணான பதிலை அளித்துள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் வாகனத்தில் ஆவணங்களை சோதனை செய்த போது அத்தனையும் பொய்யாக உள்ளதாக தெரிய வந்துள்ளது
இதனால் அந்த காரினை, இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பெயரில் பறிமுதல் செய்து சிறை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.