திருவதிகையில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
திருவதிகையில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் சுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவதிகையில் அமைந்துள்ளது மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீர ஆஞ்சநேய சுவாமி ஆலயத்தில் திருப்பணிகள் முடிவு பெற்ற நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடு செய்யப்பட்டது.இதனையடுத்து ஆலயத்தில் கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.
அதனைத் தொடர்ந்து இன்று மகா பூர்ணாஹுதி பூஜைக்கு பின் கடம் புறப்பாடு நடைபெற்று வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு வீர ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேக அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைக்கான சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கூட்ட நெரிச்சல் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு பண்ருட்டி காவல்துறையினர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.